• Mon. Oct 26th, 2026

24×7 Live News

Apdin News

மழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தின் 4 வட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

Byadmin

Oct 26, 2026


தொடர் மழை காரணமாக இன்று (அக்.26) நீலகிரி மாவட்டத்தின் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய நான்கு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.

இதுதவிர புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரஞ்சு எச்சரிக்கை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு மிதமான மழை அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin