• Thu. May 14th, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசத்திடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் மீது சீற்றம் – முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

Byadmin

May 14, 2026


பாகிஸ்தான் அணி, வங்கதேச அணி, டெஸ்ட் போட்டி, கிரிக்கெட்

பட மூலாதாரம், MUNIR UZ ZAMAN / AFP via Getty Images

படக்குறிப்பு, ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

    • எழுதியவர், ரஷீத் ஷகூர்
    • பதவி, மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பது, முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.

ஒரு கடினமானப் போராட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட தோல்வியாக இதனை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை, மாறாக இது பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு பிரிவிலும் காணப்பட்ட மோசமான செயல்பாட்டின் விளைவு என்று கூறப்படுகிறது, அதேசமயம் இது தவறான கூற்றும் அல்ல.

பாகிஸ்தான் அணியின் இந்தத் தோல்வியின் மிகவும் ஏமாற்றமளிக்கும் அம்சம் என்னவென்றால், வங்கதேசத்திற்கு எதிராக அந்த அணி சந்திக்கும் மூன்றாவது தொடர்ச்சியான தோல்வி இதுவாகும், மேலும் வங்கதேச மண்ணில் அந்த அணி சந்திக்கும் முதல் தோல்வியும் இதுவே ஆகும்.

ஜூலை 2023-இல் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றதிலிருந்து, பாகிஸ்தான் அணி நாட்டிற்கு வெளியே ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது பாகிஸ்தானின் பார்வையில் கவலைக்குரிய விஷயமாகும்.

இந்த காலகட்டத்தில், ஆஸ்திரேலியாவில் 3-0 என்ற கணக்கிலும், தென்னாப்பிரிக்காவில் 2-0 என்ற கணக்கிலும் டெஸ்ட் தொடர்களை அந்த அணி இழந்துள்ளது.

By admin