தற்போது வைரலாகி வரும் அந்த காணொளியில், திறந்த டிக்கியுடன் வேகமாக செல்லும் காரையும், சாலையில் உருண்டு விழாமல் இருக்க குழந்தைகள் சாய்ந்து கொள்வதையும் கண்டு, அதைப் பதிவு செய்யும் நபர் நம்பமுடியாமல் பெருமூச்சு விடுவது கேட்கிறது.
வைரலான அந்த வீடியோ தொடர்பாக, சைபராபாத் போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வாகன உரிமையாளர் அங்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விதிமீறலுக்காக அந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளர் தொடர்பில் இல்லாததால், நாங்கள் தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கி, இதுபோன்ற அபாயகரமான மற்றும் ஆபத்தான பழக்கங்களையோ அல்லது எதிர்காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவதையோ தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தினோம்,” என்று சைபராபாத் போக்குவரத்து காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.