• Sat. Jul 12th, 2025

24×7 Live News

Apdin News

வங்கதேசம்: போராட்டக்காரர்களை கொன்று குவித்த ஷேக் ஹசீனாவின் நேரடி உத்தரவு – வெளியான ஆடியோ ஆதாரம்

Byadmin

Jul 11, 2025


வங்கதேசம்: போராட்டக்காரர்களை கொன்று குவிக்க உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, வங்கதேசத்தில் மாணவர்கள் சூரையாடியதாகக் கூறப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை ஷேக் ஹசீனா பார்வையிட்டபோது…

    • எழுதியவர், கிறிஸ்டோபர் கில்ஸ், ரித்தி ஜா, ரஃபித் ஹுசைன் & தாரேகுஸ்ஸமன் ஷிமுல்
    • பதவி, பிபிசி ஐ புலனாய்வு பிரிவு & பிபிசி வங்க மொழி சேவை

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக கொடிய அடக்குமுறையைக் கையாள அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி அளித்ததாக, அவரது தொலைபேசி அழைப்புகளில் ஒன்றின் ஆடியோ பதிவு காட்டுகிறது. இந்த ஆடியோ பதிவு பிபிசி ஐ குழுவினரால் சரிபார்க்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இணையத்தில் கசிந்த இந்த ஆடியோவில், போராட்டக்காரர்களுக்கு எதிராக “கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த” தனது பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் அளித்திருப்பதாகவும், “அவர்களை எங்கு கண்டாலும் பாதுகாப்புப் படையினர் சுடுவார்கள்” என்றும் ஹசீனா கூறுகிறார்.

இந்த ஆடியோ பதிவை வங்கதேசத்தில் உள்ள வழக்கறிஞர்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அவர் வங்கதேசத்தில் இல்லையென்றாலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டத்தில் 1,400 பேர் வரை உயிரிழந்ததாக ஐ.நா. புலனாய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.

By admin