• Wed. Oct 28th, 2026

24×7 Live News

Apdin News

வசந்ததீபன் கவிதை

Byadmin

Oct 28, 2026


மானுட குலம் அழகானது
உலகம் அன்பால் ஆனது
பசியால் உணவு திருடியவனை
கொலை செய்வதை வேடிக்கை பார்க்கும்
நோயால் மரணித்த மனைவியை புதைக்க
பல மைல்கள் சுமந்து செல்பவனைக் காணாதிருக்கும்
லாக்கப் மரணங்களை
ஒருபோதும் கவனிக்காது
உணவாக மாட்டுக்கறியை வைத்திருப்பவரை
கொல்வதை ஏனென்று கேட்காது
சிறுமிகளை.. பெண்களை சீரழிப்பவரை
சீராட்டி வளர்க்கும்
இயற்கையை வேட்டையாடுபவர்க்கு சேவகம் செய்யும்
கொலை செய்பவரை போற்றித் துதிக்கும்
அப்பாவிகளையும் குழந்தைகளையும்
போர் என பலியிடுவதைத் தடுக்காது
சொந்த நிலத்திலிருந்து துரத்தப்படுபவர்களை புனைவுகளாக
வாசித்துக் கொண்டிருக்கும்
கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி
உயிர்நீத்தவர்களுக்காக ஒரு சொல்லைக் கூட உதிர்க்காது
வாழ்வை நேசிப்பவரை தற்கொலைக்கு தள்ளும்
கனவுகளை மன நோயாளிகளின் புகலிடம் என்கும்
கண்ணீர் அவ நம்பிக்கையின் பூக்கள்…
குருதி மூலதனம் குடிக்கும் பானம் …
வியர்வை நரகத்தின் தீராத அடைமழை.
. .
நேசம் மனிதனை வேட்டையாடும் எலிப்பொறி…
என என்ன..என்னவோ சொல்லும்
மானுட குலம் அழகானது
உலகம் அன்பால் ஆனது.

வசந்ததீபன்

The post வசந்ததீபன் கவிதை appeared first on Vanakkam London.

By admin