• Wed. Jun 3rd, 2026

24×7 Live News

Apdin News

வசீம் அக்ரம் ஹஜ் பயணத்தில் தனது பந்துவீச்சு பாணியில் சாத்தான் மீது கல் எறிந்து ஏன்?

Byadmin

Jun 3, 2026


வசீம் அக்ரம் தனது நண்பர்களான மிஸ்பா, ஃபகர் ஆகியோருடன் ஹஜ் செய்யச் சென்றிருந்தார்.

பட மூலாதாரம், fakhar alam

படக்குறிப்பு, வசீம் அக்ரம் தனது நண்பர்களான மிஸ்பா, ஃபகர் ஆகியோருடன் ஹஜ் செய்யச் சென்றிருந்தார்.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாத்தின் முக்கிய அடிப்படை கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்றிய பிறகு தங்களது வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், இதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று பிரபலமாக அழைக்கப்படுபவருமான வசீம் அக்ரம், ஒரு வைரல் வீடியோ காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதோடு இது குறித்து முடிவற்ற விவாதமும் கிளம்பியுள்ளது.

இந்த வீடியோவில், வசீம் அக்ரம் மினாவில் சாத்தான் மீது கல் எறிவதைக் காண முடிகிறது. இது ‘ரமி’ என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் வசீம் அக்ரம் சாத்தான் மீது கல் எறியக் கையாண்ட முறை சாதாரணமான ஒன்றாக இருக்கவில்லை. அவர் தனது பந்துவீச்சு பாணியில் இந்தச் செயலைச் செய்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளராக வசீம் அக்ரம் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தனது பந்துவீச்சு பாணியில் கல் எறிந்த அவரது இந்த விதம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

By admin