2
வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் விரைவில் உண்மைகள் வெளிவரும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
”செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் விரைவில் உண்மைகள் வெளிவரும். இதற்கு அரசு ஒருபோதும் தடையாக இருக்கமாட்டாது.
வடக்கு மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதிமன்றங்களில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.
உண்மைகள் வெளிவந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.” – என்றார்.