• Fri. Jul 18th, 2025

24×7 Live News

Apdin News

வந்தே பாரத் ரயில் முன்பதிவில் புதிய வசதி அறிமுகம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு | Unreserved tickets for Vande Bharat trains

Byadmin

Jul 18, 2025


கோவை: தெற்கு ரயில்வே சார்பில் கோவை -பெங்களூரு உள்ளிட்ட 8 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடங்களுக்கு முன் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை -பெங்களூரு உள்ளிட்ட 8 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் ஜூலை 17-ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத டிக்கெட்களை 15 நிமிடங்களுக்கு முன்பு வரை முன்பதிவு இல்லாத டிக்கெட்களை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்களில் கூடுதல் பயணிகளை ஏற்றி செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

8 வழித்தடங்கள் விவரம்: மங்களூரு – திருவனந்தபுரம் சென்ட்ரல், திருவனந்தபுரம் சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல், சென்னை எழும்பூர்- நாகர்கோயில், நாகர்கோயில்-சென்னை எழும்பூர், கோவை -பெங்களூரு, மங்களூரு- மட்கான், மதுரை-பெங்களூரு, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – விஜயவாடா. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin