• Thu. Jul 3rd, 2025

24×7 Live News

Apdin News

வர்த்தகத்தை நிறுத்துவதாக மிரட்டியதா அமெரிக்கா? – பிரதமர் மோதி நடத்திய உரையாடலை தெளிவுபடுத்தும் ஜெய்ஷங்கர்

Byadmin

Jul 2, 2025


வான்ஸ், மோதி

பட மூலாதாரம், Getty Images

மே 9 ஆம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் நரேந்திர மோதியை தொலைபேசியில் அழைத்தபோது, ​​தானும் அதே அறையில் இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படாது, மாறாக அதற்குப் பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் அப்போது தெளிவாகக் கூறியதாகக் குறிப்பிட்டார் ஜெய்சங்கர்.

மே மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடங்கிய ராணுவ மோதலை நிறுத்திவிட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை நிறுத்துவதாக மிரட்டியதாகவும், அதன் பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் அப்போது டிரம்ப் தெரிவித்தார்.

By admin