• Fri. Aug 7th, 2026

24×7 Live News

Apdin News

வறட்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

Byadmin

Aug 7, 2026


தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பாதிப்புகளை சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

எல் நினோ தாக்கம் மற்றும் பருவமழை பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இந்த அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், வறட்சி நிவாரணப் பணிகளுக்காகவும் நிதி பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பேரூராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.96.41 கோடியும், குடிநீர் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.58.55 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.36.65 கோடியும், நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.97.36 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

By admin