0
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் காணி விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (21) காலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
அதில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், மயிலிட்டி மீள்குடியேற்ற சங்கத்தினர் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை பகிர்ந்தனர்.