வவுனியா, பரசங்குளம் ஏ – 9 வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் பரசங்குளம் பகுதியில் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான கிளிநொச்சி, பாரதிபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெயசீலன் திவாகரன் பலியாகியாள்ளர்.
சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் மரணம்! appeared first on Vanakkam London.