• Sat. Jul 18th, 2026

24×7 Live News

Apdin News

விக்ரம்-1: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் வெற்றி – அதன் சிறப்பு அம்சங்கள் என்ன?

Byadmin

Jul 18, 2026


விக்ரம்-1 ராக்கெட், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து மதியம் 12:05 மணிக்கு விக்ரம்-1 ராக்கெட் ஏவப்பட்டது.

    • எழுதியவர், அமரேந்திர யாரலகட்டா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல்-கிளாஸ் ராக்கெட்டான விக்ரம்-1, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விக்ரம்-1 ராக்கெட் சுமந்து சென்ற கருவிகளை சுமார் 450 கி.மீ. சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. இதன் மூலம், தனியார் ஆர்பிட்டல் ஏவுதிறன் கொண்ட உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நிறுவனம் விக்ரம்-எஸ் என்ற சப்-ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

முன்னதாக நாங்கள் ‘விக்ரம்-எஸ்’ ராக்கெட்டிற்கு ‘மிஷன் சர்வம்’ என்று பெயரிட்டிருந்தோம். இப்போது ‘விக்ரம்-1’ ஏவுதலுக்கு ‘மிஷன் ஆகமன்’ என்று பெயரிட்டுள்ளோம்” என ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா பிபிசியிடம் கூறினார்.

ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகம்

பட மூலாதாரம், skyrootaerospace

படக்குறிப்பு, ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாகம்

விக்ரம்-1 ராக்கெட்டின் சிறப்பு அம்சங்கள்

விக்ரம்-1 ராக்கெட்டை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் முதன்முதலில் நவம்பர் 2025 இல் காட்சிப்படுத்தியது. இது இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான ராக்கெட் என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா பிபிசியிடம் தெரிவித்தார்.

By admin