0
விஜய்சேதுபதி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் தலைவன்தலைவி திரைப்படத்தில் லன்டன் வாழ் இலங்கைத் தமிழரும், பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞருமான குருஜி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள விஜய் சேதுபதியின் தலைவன்தலைவி என்ற இந்தப் படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயனின் இசையில் ஈழத் தமிழன் குருஜி இந்தப் பாடலைப் பாடியுள்ளமை விசேட அம்சமாகும்.
லண்டன் வாழ் தமிழரான குருஜி உலக நாடுகள் பலவற்றில் பல நூற்றுக்கணக்கான புல்லாங்குழல் இசைக் கச்சேரிகளை நடாத்தி உலகப் பிரசித்தம் பெற்றுள்ளவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
திரையில் இவரது பாடல் இசைப் பயணம் சிறக்க வணக்கம் இலண்டன் வாழ்த்தி நிற்கிறது.