• Wed. May 6th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் தனது முதல் தேர்தலிலேயே திமுக, அதிமுகவை விஞ்சி பெருவெற்றியை வசப்படுத்தியது எப்படி?

Byadmin

May 5, 2026


திராவிட கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி விஜய் வரலாறு படைத்தது எப்படி? களத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலரும் தத்தமது தொகுதிகளில் பின்தங்கியுள்ளனர்.

தற்போதைய நிலவரம் தமிழ்நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் என்பதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில், 76 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுகவையும் 54 ஆண்டுகள் பழமையான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வயதான ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட முடிவுகளை இந்த தேர்தல் வழங்கும் அளவுக்கு தமிழக அரசியல் களத்தில் என்ன நடந்தது? விஜய் இதைச் சாத்தியமாக்கியது எப்படி?



By admin