• Wed. May 6th, 2026

24×7 Live News

Apdin News

DMK | மே 07-இல் தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம்… துரைமுருகன் அறிவிப்பு

Byadmin

May 6, 2026


தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி இருக்கிறது. இந்த தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள த.வெ.க. கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சென்னை வருமாறு அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நாளை மறுநாள் (மே 07) தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவதாகவும், இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் எம்.எல்.ஏ. கூட்டத்தில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்த கொள்கின்றனர். இந்தக் கூட்டம் 07-05-2026 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

By admin