• Wed. May 6th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் தமிழக முதலமைச்சராக சந்திக்கப் போகும் சவால்கள் யாவை?

Byadmin

May 6, 2026


விஜய் தமிழக முதலமைச்சராக சந்திக்கப் போகும் சவால்கள் யாவை?

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்றுப் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மறுபுறம், அவர் மாநில முதல்வராக எவ்வாறு செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்து வருகின்றன.

பன்னெடுங்காலமாக, மாநில ஆட்சி, திமுக, அதிமுக என இருபெரும் திராவிடக் கட்சிகளுடைய ஆதிக்கத்தில் இருந்து வந்தது. அவற்றின் சித்தாந்த வேர்கள், நலத்திட்ட அரசியல் ஆகியவை தேர்தல் முடிவுகளையும் நிர்வாகக் கட்டமைப்பையும் வடிவமைத்துள்ளன.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, தவெக-வின் வெற்றி என்பது ஓர் அரசியல் அதிர்ச்சியாக மட்டுமின்றி, அதுவொரு கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதையும் குறிக்கிறது.

இருப்பினும், தேர்தல் வெற்றி என்பது தொடக்கம் மட்டுமே. சினிமா கவர்ச்சியில் இருந்து நகர்ந்து ஆட்சியின் சிக்கலான எதார்த்தங்களை எதிர்கொள்ளும் காலகட்டம், எந்தவொரு புதிய அரசியல் இயக்கத்திற்கும் மிகவும் கடினமான கட்டமாக அமையக்கூடும்.

விஜய் தலைமையில் அமையப்போகும் புதிய அரசு, நிதி மேலாண்மை, நிர்வாகச் செயலாக்கம், தலைமைத்துவத்தை ஒருங்கிணைத்தல், கணிசமான எண்ணிக்கையில் சட்டப்பேரவையில் பங்கு வகிக்கப் போகும் எதிர்க்கட்சிகளைச் சமாளித்தல் எனப் பல அடுக்குகளில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படிக் காத்திருக்கும் சவால்கள் யாவை? இங்கு விரிவாகக் காண்போம்.

By admin