• Mon. Jun 29th, 2026

24×7 Live News

Apdin News

விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்… 11 பேர் உயிரிழந்ததால் சோகம்

Byadmin

Jun 29, 2026


பாராசூட்டிங்கின் ஒரு சிலிர்ப்பூட்டும் அறிமுகத்திற்காக தங்கள் அன்புக்குரியவர்களை ஏற்றி சென்ற ஸ்கைடைவிங் விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடகிழக்கு பிரான்சில் விபத்துக்குள்ளான நிலையில், விமானத்தில் இருந்த 11 பேரும் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் ஐந்து பாராசூட்டிங் பயிற்றுனர்கள், ஐந்து புதியவர்கள் மற்றும் விமானி ஆகியோர் அடங்குவர் என்று உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் கூறினார். சுமார் 30 ஆண்டுகளில் ஸ்கைடைவிங் சம்பந்தப்பட்ட பிரான்சின் மிகப்பெரிய விமான விபத்து இது என்று போக்குவரத்து அமைச்சர் பிலிப் டபரோட் கூறினார்.

விமான விபத்து:

“உயிரிழந்தவர்களில் சிலரின் குடும்பத்தினர் விமானம் விழுவதை தங்கள் கண்களால் பார்த்தனர். எனவே, மிகுந்த உணர்ச்சிப் பெருக்கும், அதைவிட பெரிய உளவியல் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது,” என்று நூனெஸ் கூறினார்.

விபத்துக்கான காரணம் குறித்து ஊகிக்க மறுத்த அவர், விமானம் திடீரென வானத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறினார். நான்சி நகரின் புறநகர் பகுதியான நான்சி-எஸ்ஸி விமான நிலையத்தில இருந்து விமானம் புறப்பட்டபோது, ஓடுபாதையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அது கீழே விழுந்ததாக அவர் கூறினார்.

அசம்பாவிதம் தவிர்ப்பு:

மெர்த்-எட்-மொசெல்லே பிராந்தியத்தின் ஆளுநரான ஈவ்ஸ் செகுய், விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும், அது “கிட்டத்தட்ட செங்குத்தாக கீழே விழுந்து. இந்த விபத்து சில டஜன் மீட்டர்கள் தொலைவில் நடந்திருந்தால், அது கூடுதல் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடும்”, குடியிருப்பு பகுதியை மயிரிழையில் தவறவிட்டதாகவும் கூறினார்.

விமானம் புறப்பட்ட பிறகு இடதுபுறமாகச் சாய்ந்து, ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் வீடுகளுக்கு அருகில் விழுந்து நொறுங்கியதாக Flightradar24 என்ற விமானப் பயண கண்காணிப்பு சேவை தெரிவித்துள்ளது. நொறுங்கிய விமானத்தின் சிதைவுகளை காவல்துறை சுற்றி வளைத்தது.

By admin