• Sun. Aug 9th, 2026

24×7 Live News

Apdin News

விரல் சொடுக்குவது ஆபத்தான பழக்கமா? விரல் சொடுக்கும் போது சத்தம் வருவது எப்படி? 4 கேள்வி – பதில்கள்

Byadmin

Aug 9, 2026


கை விரல்களைச் சொடுக்குவது, உடல் நலம்

பட மூலாதாரம், BBC/ Serenity Strull/ Getty Images

படக்குறிப்பு, சில ஆய்வுகளின்படி, 20 முதல் 50% வரையிலான மக்கள் விரல்மூட்டுகளைச் சொடுக்குகின்றனர்.

    • எழுதியவர், சான்டி ஓங்க்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வளரும் பருவத்தில் அடிக்கடி விரல் சொடுக்குவது மூட்டுவாதத்தை ஏற்படுத்தும் என்று டொனால்ட் அங்கருக்கு அவரது தாய், அத்தைகள், பின்னர் அவரது மாமியார் ஆகியோர் எச்சரித்திருந்தனர்.

ஆனால் அவர்களின் எச்சரிக்கை தவறு என்பதை நிரூபிக்கத் தீர்மானித்த டொனால்ட், 50 ஆண்டுகளுக்கு தினமும் குறைந்தபட்சம் இருமுறையாவது தனது இடது கையின் விரல்களைச் சொடுக்கினார். மொத்தத்தில் சுமார் 36,500 முறை விரல் சொடுக்கிய அவர், வலது கையை எதுவும் செய்யவில்லை.

1998-ஆம் ஆண்டு அவரது, 72-வது வயதில், தனது வாழ்நாள் முயற்சியின் விளைவை அறிய இரு கைகளுக்கும் எக்ஸ்ரே பரிசோதனை செய்தார்.

அதன் பிறகு “இரண்டு கைகளிலும் மூட்டுவாதம் இல்லை. இரு கைகளுக்கும் இடையே எந்தத் தெளிவான வேறுபாடும் இல்லை,” என்கிற முடிவுக்கு வந்தார்.

இது ஒருவரை அடிப்படையாகக் கொண்ட ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. சில ஆய்வுகளின்படி, 20 முதல் 50% வரையிலான மக்கள் விரல் சொடுக்குகின்றனர்.

By admin