• Mon. Aug 10th, 2026

24×7 Live News

Apdin News

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு

Byadmin

Aug 9, 2026


மேகேதாட்டு, காவிரி நதி நீர் பங்கீடு, தமிழ்நாடு, கர்நாடகா

பட மூலாதாரம், Ashish Shetty/BBC

படக்குறிப்பு, காவிரி நதி

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

‘மொபைல் சிக்னல் எடுப்பதில்லை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானுயர்ந்து நிற்கும் மரங்களைத் தவிர எதுவுமில்லை, ஆர்ப்பரித்து ஓடும் நதியின் ஓசை மட்டும் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது’

மேகேதாட்டு என்கிற பள்ளத்தாக்கு காட்சி முனைக்கு நேரில் சென்றபோது நிலவிய சூழலை இப்படித்தான் விவரிக்க முடியும். காவிரி நதி நீர் பங்கீட்டை ஒட்டிய மேகேதாட்டு அணை தொடர்பான விவாதங்களை பிபிசி தமிழின் இந்தக் கட்டுரை பதிவு செய்கிறது.

காவிரி – இந்தப் பெயருக்கு தமிழ்நாட்டில் அறிமுகம் தேவையில்லை.

இந்தக் காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. காவிரி நதி நீர் சிக்கலைத் தீர்க்க இந்த அணை அவசியம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.

“மேகேதாட்டு திட்டம் கர்நாடகாவைவிட தமிழ்நாட்டிற்குத் தான் அதிகம் உதவும்,” என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் பேசியிருந்தார்.

By admin