• Fri. May 15th, 2026

24×7 Live News

Apdin News

விராத் கோஹ்லி 9வது ஐபிஎல் சதம், ரி20யில் விரைவான 14000 ஓட்டங்கள் | KKRஐ வென்றது RCB

Byadmin

May 15, 2026


ராய்பூர் சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை 5 பந்துகள் மீதம் இருக்க 4 விக்கெட்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வெற்றிகொண்டது.

இந்தப் போட்டி முடிவுடன் ப்ளே ஓவ் வாய்ப்பை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு சற்று அதிகரித்துக்கொண்டதுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வாய்ப்பு குறைந்துள்ளது.

இப் போட்டியில் விராத் கோஹ்லி குவித்த 9ஆவது ஐபிஎல் சதம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிபெறச் செய்தது. அத்துடன் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு மைல்கல் சாதனைகளை விராத் கோஹ்லி நிலைநாட்டினார்.

ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 சதங்களைக் குவித்த முதலாவது இந்தியர் என்ற சாதனையையும் விரைவாக 14000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையையும்  விராத் கோஹ்லி நிலைநாட்டினார்.

ரி20 போட்டிகளில் 409 இன்னிங்ஸ்களில் 14,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ததன் மூலம் க்றிஸ் கெய்லின் சாதனையை விராத் கோஹ்லி முறிடியத்தார். கெய்லுக்கு இந்த சாதனையை நிலைநாட்ட 423 இன்னிங்ஸ்கள்  தேவைப்பட்டது.

ரி20 போட்டிகளில் 14000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த ஆறாவது வீரரான கோஹ்லி, இந்தியர்களில் முதலாமவர் ஆனார்.

கணிசமான மொத்த எண்ணிக்கைகள்

கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.

அங்க்ரிஷ் ரகுவன்ஷி 71 ஓட்டங்களையும் ரின்கு சிங் ஆட்டம் இழக்காமல் 49  ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 76 ஓட்டங்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தன. ஆனால், அது பலன் கொடுக்கவில்லை.

அவர்களை விட கெமரன் க்றீன் 32 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

விராத் கோஹ்லி 60 பந்துகளில் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 105 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

அவருக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகப்பட்ச 39 ஓட்டங்களை தேவ்டத் படிக்கல் பெற்றார்.

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி.

By admin