தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தில், தர்ம முனீஸ்வரன் என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலைசெய்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த நிலையில், இந்தக் குற்ற சம்பவத்தில் முனீஸ்வரன் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், இன்று தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தர்ம முனீஸ்வரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் 12 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.