தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர்.ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘அங்கீகாரம்’. ஜேபி. தென்பாதியான் இயக்கும் இப்படத்தில் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் பிரசாந்த் – அஜித் பாஸ்கர் – அருண் முருகன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. டிரெய்லரில், தடகள விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத் துறையின் அவலங்களையும் எடுத்துக்கூறுகிறது. இப்படத்திற்காக ரூ.75 லட்சம் செலவில் கோர்ட் வளாக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.
Here's my upcoming movie #Angikaaram – a Tamil sports drama with a powerful statement.
Directed by @jpthenpathiyan and starring @KJRuniverse in his debut as an actor. Hope you all love it! @swastik_visions pic.twitter.com/icq6IBomrl
— Ghibran Vaibodha (@GhibranVaibodha) May 13, 2026