• Thu. May 14th, 2026

24×7 Live News

Apdin News

நீட் தேர்வின் வினாத்தாள் எங்கிருந்து கசியக்கூடும்?

Byadmin

May 14, 2026


நீட் தேர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நீட் தேர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

    • எழுதியவர், ஷுபாங்கி மிஷ்ரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மே 3 அன்று இந்தியா முழுவதும் உள்ள 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையில் நீட் தேர்வெழுதினர்.

9 நாட்கள் கழித்து தேசிய தேர்வு முகமை (NTA) முதன்முறையாக இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கான நீட் தேர்வை ரத்து செய்தனர்.

மறுதேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை, அதுவும் சேர்க்கை நடைமுறையில் தாமதத்தை ஏற்படுத்தலாம் என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலையை அதிகரித்துள்ளது.

செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் NTA பொது இயக்குனர் அபிஷேக் சிங் கூறுகையில், தேர்வு நடந்த நான்கு நாட்கள் கழித்து மே 7 அன்று ‘மாதிரி தாள்’ (guess paper) ஒன்றின் பிடிஎஃப் வாட்ஸ்ஆப்பில் பரவியதாகவும் அது உண்மையான வினாத்தாளை ஒத்திருந்ததாகவும் ஒருவரிடமிருந்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.

மேலும், “தேர்வில் எந்தவித விதிமீறலும் எங்களின் சகிப்பின்மை கொள்கைக்கு எதிரானது, மேலும் இந்த தேர்வுக்காக கடுமையாக உழைத்த 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தையும் அது மிக மோசமாக பாதிக்கும்.” என்றார்.

By admin