நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, வெனிசுலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமெரிக்கப் படைகள் வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் 900இற்கும் மேற்பட்ட வீரர்களும், கரீபியன் மையங்களான புவேர்ட்டோ ரிக்கோ ( Puerto Rico ) மற்றும் குராசோவில் (Curacao) சுமார் 800 வீரர்களும் உள்ளதாக அமெரிக்காவிற்கான உயர்மட்ட ஜெனரல் தெரிவித்தார்.
அதேநேரம் வெனிசுலாவின் மீது குறைந்தது நான்கு அல்லது ஐந்து MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்களை அமெரிக்க இராணுவம் நிலைநிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது வெனிசுலா அதிகாரிகளுக்கான உளவுத் தகவல்களை வலுப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“பிராந்திய அச்சுறுத்தல்களைக் கண்காணிக்க நாங்கள் பயன்படுத்தக்கூடிய அதே கருவிகளில் சிலவற்றை, இப்போது வீதிகள் திறந்திருப்பதை உறுதி செய்யவும், சேதமடைந்த கட்டிடங்கள் எங்கு உள்ளன என்பதை அறிந்துகொள்ளவும் பயன்படுத்துவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
The post வெனிசுலாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள்: ஆளில்லா விமானங்களும் களத்தில்! appeared first on Vanakkam London.