இங்கிலாந்தின் காலநிலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், வெப்பம் மற்றும் மழைப்பொழிவு பதிவுகள் அதிகரித்து வருவதாக வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.
இங்கிலாந்தில் சில தசாப்தங்களுக்கு முன்பு இருந்த காலநிலையை விட குறிப்பிடத்தக்க வகையில் தற்போதைய காலநிலை மாறுபட்டதாகக் காணப்படுவதாக இங்கிலாந்து காலநிலை அறிக்கை கூறுகிறது.
சமீபத்திய மதிப்பீட்டின்படி, தற்போது மிகவும் வெப்பமான நாட்கள் அதிகமாக இருப்பதுடன், மிகக் குறைந்த குளிர் இரவுகளே காணப்படுகின்றன.
புவி வெப்பமடைதல் நாட்டின் காலநிலையை எவ்வளவு மாற்றியமைத்திருக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
இந்த அறிக்கை 2024 இல் கவனம் செலுத்துகிறது. 1884 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து தற்போது மிகக் கூடுதலான ஐந்தாவது வெப்பமான குளிர்காலத்தை அனுபவித்து வருகிறது.
இந்தப் பதிவுகளில் சில ஏற்கெனவே 2025 இல் முறியடிக்கப்பட்டுள்ளன என்பதை வானிலை அலுவலகம் எடுத்துக்காட்டுகிறது. இது மிகவும் தீவிரமான வானிலையை நோக்கிய போக்கின் சான்றுகள் அகும்.
இந்தக் கோடையில் நாட்டின் பல பகுதிகள் அவற்றின் மூன்றாவது வெப்ப அலையின் தாக்கத்தில் உள்ளன. மிகவும் வெப்பமான வானிலை வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து மற்றும் தெற்கு இங்கிலாந்து ஆகியன அனுபவித்து வருகின்றன.
வெள்ள அபாயம் அதிகரித்து வருகிறது
இதேவேளை, சமீபத்திய ஆண்டுகளைப் போலவே, வெள்ளம் மற்றும் புயல்கள் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் மிக மோசமான வானிலை சேதத்தை ஏற்படுத்தின.
2023 இலையுதிர் காலத்தில் தொடங்கி, இங்கிலாந்தைத் தாக்கிய பெயரிடப்பட்ட புயல்களின் தொடர் ஜனவரி தொடக்கத்தில் பரவலான வெள்ளத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிழக்கு ஸ்காட்லாந்து, டெர்பிஷயர், நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆகியவை அடங்கும்.
கடந்த ஆண்டு செப்டெம்பரில் சில இடங்களில் வழக்கமான மழைப்பொழிவு மூன்று முதல் நான்கு மடங்கு பதிவாகியுள்ளது.
2024 ஜனவரி தொடக்கத்தில், வெள்ளம் காரணமாக தொடர்ச்சியாக இரண்டு மாலை வேளை நிகழ்ச்சிகளை இரத்து செய்ய வேண்டிய நிலை ராயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருந்தது.
நவம்பரில் வொர்செஸ்டர்ஷையரில் உள்ள டென்பரி வெல்ஸில் ஒரு சுவர் இடிந்து விழுந்து, உள்ளூர் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து, நகர மையத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
வானிலை அலுவலக தலைமை விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் பெல்ச்சர் கூறுகையில், “காலநிலை மாற்றம் ஏற்கெனவே கொண்டு வரும் தாக்கங்களின் சான்றுகள், எதிர்கால உச்சநிலைகளைச் சமாளிக்க இங்கிலாந்து மாற்றியமைக்க வேண்டிய அவசரத் தேவையைக் காட்டுகின்றன.
“காலநிலை தொடர்ந்து மாற வாய்ப்புள்ளது. இது நாம் அனுபவிக்கும் வானிலையில் ஏற்படுத்தும் தாக்கங்களுக்கு நாம் தயாராக வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மேலும், இங்கிலாந்தைச் சுற்றி கடல் மட்டங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெள்ள அபாயம் மேலும் அதிகரிக்கும் என்று தேசிய கடல்சார் மையத்தைச் சேர்ந்த டொக்டர் ஸ்வெட்லானா ஜெவ்ரேஜேவா கூறுகிறார்.
மூலம் : bbc/uk
The post வெப்பம், வெள்ளம்; மாறிவரும் காலநிலையால் திண்டாடும் இங்கிலாந்து! appeared first on Vanakkam London.