• Tue. Oct 27th, 2026

24×7 Live News

Apdin News

வெற்றியை நூலிழையில் தவறவிட்ட இந்தியா ஏ: 4 நாள் போட்டியை டிரா செய்தது நியூசிலாந்து ஏ

Byadmin

Oct 27, 2026


இந்தியா ஏ-நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்தியா ஏ அணி கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய நிலையில் நியூசிலாந்து ஏ அணி போராடி சமன் செய்தது.

இந்தியா ஏ, நியூசிலாந்து ஏ அணிகள் 3 நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடர் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் மற்றும் 3-வது போட்டிகள் லிங்கனிலும், இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி லிங்கனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா 113 ரன்னுக்கு ஆல் அவுட்

அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். இந்திய அணியில் 5 வீரர்கள் டக் அவுட் ஆகினர். யஷ் ரத்தோட் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 77 பந்தில் 33 ரன் எடுத்தார்.

சைமன் கீன் 5 விக்கெட்

நியூசிலாந்து ஏ அணி சார்பில் சைமன் கீன் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டும், ஜாக் கிப்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, ஆடிய நியூசிலாந்து ஏ முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரைஸ் மரியு 76 ரன் விளாசினார். டீன் பாக்ஸ்ராப்ட் 51 ரன் எடுத்தார். கர்டிஸ் ஹீபி 44 ரன்னும், கிறிஸ்டியன் கிளர்க் 42 ரன்னும் எடுத்தனர்.

இதன்மூலம் 234 ரன்கள் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது.

இந்தியா ஏ அணி சார்பில் அன்ஷுல் கம்போஜ், அவ்கிப் நபி தலா 3 விக்கெட்டும், ஆகாஷ் தீ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

படிக்கல், சாய் சுதர்சன் அபாரம்

3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 215 ரன்கள் எடுத்த நிலையில், சாய் சுதர்சன் 91 ரன்னில் அவுட்டானார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட படிக்கல் 199 ரன்னில் வெளியேறினார். யஷ் ரதோட் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்தியா ஏ அணி 2வது இன்னிங்சில் 516 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து ஏ சார்பில் ஜாக் கிப்சன் 3 விக்கெட்டும், கிறிஸ்டன் கிளர்க், ஜேடன் லெனாக்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

போராடிய நியூசிலாந்து

இதையடுத்து, 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஏ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கர்டிஸ் ஹெர்பி தனியாகப் போராடி அரை சதம் கடந்தார். டீன் பாக்ஸ்ராப்ட் 42 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், நியூசிலாந்து ஏஅணி 65 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா ஏ அணி எளிதில் ஒரு விக்கெட்டை கைப்பற்றி வெற்றி பெற்று விடும் என எதிர்பார்த்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

By admin