• Wed. Oct 28th, 2026

24×7 Live News

Apdin News

புகலிடக் கோரிக்கையாளர்களின் வயதை நிர்ணயிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டம்

Byadmin

Oct 27, 2026


இங்கிலாந்தில் தங்களைச் சிறுவர்கள் எனக் கூறி புகலிடம் கோரும் நபர்களின் உண்மையான வயதை துல்லியமாக மதிப்பிடுவதற்காக, அடுத்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் வயது மதிப்பீட்டு அல்காரிதத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் ஹார்லோ நகரைச் சேர்ந்த அக்தர் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தொழில்நுட்பம் பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் மிகக் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என இங்கிலாந்து அமைச்சர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேவேளை, இத்தகைய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மதிப்பீடுகளில் தவறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதால், இந்த நடைமுறையின் துல்லியம் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகள் தொடர்பான பல்வேறு விவாதங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.

By admin