• Wed. Oct 28th, 2026

24×7 Live News

Apdin News

ஆந்திரா: நரசாபுரம் அருகே கரையைக் கடந்த அர்னாப் புயல் – நிலவரம் என்ன?

Byadmin

Oct 28, 2026


அர்னாப் புயல்: மணிக்கு 150கி.மீ வேகத்தில் காற்று – 15 மாவட்டங்களில் திடீர் வெள்ள அபாயம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வங்கக்கடலில் உருவான அதிதீவிரமான அர்னாப் புயல் ஆந்திர பிரதேசத்தின் நரசாபுரம் அருகே கரையைக் கடந்ததாக ஆந்திர பிரதேச மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இரவு 2 மணி முதல் காலை 8 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், ஏனாமுக்கு தென்மேற்கே நரசாபுரம் அருகே புயல் கரையைக் கடந்ததாக ஆந்திர பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பிரகார் ஜெயின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கரையைக் கடந்ததைத் தொடர்ந்து புயல் தற்போது வலுவிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும், அர்னாப் புயல் கரையைக் கடந்துவிட்டதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும், தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

புயலின் தாக்கத்தால் ஆந்திர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் பிரகார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

அர்னாப் புயல்: மணிக்கு 150கி.மீ வேகத்தில் காற்று – 15 மாவட்டங்களில் திடீர் வெள்ள அபாயம்

ஆந்திராவின் பல பகுதிகளில் கடும் பாதிப்பு

ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் மரங்களும் மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பொது மக்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.



By admin