புழல் சிறை வாசலில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய போது முதலமைச்சர் குறித்து சர்ச்சையான வகையில் பேசிய கவுன்சிலர் டீட்டா சரவணன், போலீசாரால் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ.. பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
வழக்கு பதிவு
இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியை புழல் சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது புழல் சிறை வாசலில் தி.மு.க.வினர் திரண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது வேலூர் காட்பாடியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் டீட்டா சரவணன் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக தெரிகிறது. இது குறித்து டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில், விழுப்புரத்தில் மறைந்திருந்த தி.மு.க. கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீசார் விழுப்புரத்தில் வைத்து கைது செய்தனர்.
நண்பர்களோடு பெங்களூரு செல்வதுபோல் போக்கு காட்டிவிட்டு விழுப்புரம் சென்று பதுங்கியிருந்த டீட்டா சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட டீட்டா சரவணனை சென்னைக்கு போலீசார் அழைத்து வருகின்றனர்.