• Wed. Oct 28th, 2026

24×7 Live News

Apdin News

மாகாண சபைத் தேர்தல் முறை தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் பெறப்பட்டன

Byadmin

Oct 28, 2026


மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.

குறித்த விசேட குழு அதன் தலைவர், வெளிவிவகாரத்துறை  அமைச்சர் விஜித ஹேரத்  தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கருத்துக்கள் பெறப்பட்டன.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் முறை தொடர்பில் ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில்  விரிவான  கலந்துரையாடல்களை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய எதிர்வரும் டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதிக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதன் சாத்தியக்கூறு தொடர்பில் ஆராயப்பட்டது.

By admin