• Tue. Apr 28th, 2026

24×7 Live News

Apdin News

வெற்றி பெற்ற இந்து வேட்பாளர்- குஜராத் உள்ளாட்சி தேர்தலில் நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு Independent Hindu Candidate Wins In Godhra Ward With 100% Muslim Voters

Byadmin

Apr 28, 2026


குஜராத் மாநிலத்தில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கோத்ரா முனிசிபாலிட்டி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அபெக்ஷாபென் நைனேஷ்பாய் சோனி போட்டியிட்டார். இவர் பெண் வேட்பாளர். அதுவும் சுயேட்சையாக போட்டியிட்டார். 7-வது வார்டில் 100 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்கள்தான். இருந்தபோதிலும் அபெக்ஷாபென் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு இந்த வார்டில் வாக்கு இல்லை. என்றாலும் முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்றதால், அங்கு நின்று வெற்றி பெற்றுள்ளார்.

நாட்டில் பல்வேறு இடங்களில் இந்து முஸ்லிம் வேற்றுமை பார்க்கும் நிலையில், இந்த வெற்றி மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

15 மாநகராட்சிகளிலும் பாஜக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள 192 இடங்களில் 146 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

சூரத்தில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ராஜ்கோட் மற்றும் வதோதராவில் பாஜக தலா 65 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் இரட்டை இலக்க உறுப்பினர்களை பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.

By admin