• Wed. Jul 16th, 2025

24×7 Live News

Apdin News

வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் இலண்டன்!

Byadmin

Jul 16, 2025


உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் இங்கிலாந்தின் இலண்டன் நகரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

6 முக்கிய விடயங்களைக் கருத்தில்கொண்டு வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் QS அமைப்பு இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது.

அதாவது, பல்கலைக்கழகங்களின் தரவரிசை, நகரம் குறித்து மாணவர்களின் கண்ணோட்டம், அங்கு எத்தனை வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர், நகரத்தில் படித்த மாணவர்கள் குறித்து பொதுவாக முதலாளிகள் என்ன நினைக்கிறார்கள், நகரம் எந்தளவுக்கு மாணவர்களை ஈர்த்துள்ளது மற்றும் நகரத்தில் வாழ்வது கட்டுப்படியாக உள்ளதா உள்ளிட்ட அம்சங்கள் இதில் பார்க்கப்பட்டுள்ளன.

இதில் முதலிடத்தில் தென்கொரிய நாட்டின் தலைநகரான சியோல் (Seoul) இடம்பிடித்துள்ளது. இரண்டாவதாக ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரம் இடம்பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் இலண்டன் உள்ளது.

அத்துடன், தென்கிழக்காசியாவில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளதுடன், பட்டியலில் 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் 10 இடங்களைப் பிடித்த நகரங்களின் பட்டியல் இதோ : 

1. சியோல் (தென்கொரியா)
2. டோக்கியோ (ஜப்பான்)
3. இலண்டன் (இங்கிலாந்து)
4. மியூனிக் (ஜேர்மனி)
5. மெல்போர்ன் (அவுஸ்திரேலியா)
6. சிட்னி (அவுஸ்திரேலியா)
7. பெர்லின் (ஜேர்மனி)
8. பாரிஸ் (பிரான்ஸ்)
9. சூரிச் (சுவிட்சர்லாந்து)
10. வியன்னா (ஆஸ்திரியா)

By admin