0
ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டெக்சஸ் மாநிலத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் 15 குழந்தைகள் உட்பட சுமார் 51 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், 20 சிறுமிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை பெய்தது. மத்திய கெர் கவுன்டியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை நீடித்தது.
பல மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை, வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 51 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் மூலமாக 167 பேர் உட்பட மொத்தம் 237 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஆற்றின் அருகே முகாமிட்டுள்ள சிறுமிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். முகாம் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டதில் 20 சிறுமிகள் மாயமாகி உள்ளனர்.
அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இறந்தவர்கள் யார் என அடையாளம் காணும் பணியையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.