• Tue. Jun 16th, 2026

24×7 Live News

Apdin News

வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன் – அதில் என்ன இருக்கிறது?

Byadmin

Jun 16, 2026


வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்

பட மூலாதாரம், TN DIPR

படக்குறிப்பு, வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

தமிழ்நாட்டின் நிதிநிலைமை பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பேசினார்.

வெள்ளை அறிக்கை வெளியிட்டபின் இந்த அறிக்கை தொடர்பான 21 பக்கங்கள் கொண்ட விளக்க படத்தை காட்டி அதற்கான விளக்கத்தை அமைச்சர் மரிய வில்சன் வழங்கினார்.

பின்னர் நிதியமைச்சர் பேசுகையில், “2021 – 2022 முதல் 2025-2026 வரையிலான காலத்தை கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஒத்த தொழில்துறை அமைப்பையும் பொருளாதார அளவும் கொண்ட மாநிலங்களுடன் நியாயமான ஒப்பீடு செய்யும் காலப்பகுதியை எடுத்துக்கொண்டோம்” என்று நித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், “இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு அந்த மாநிலங்களின் மீட்சி காலத்தை பயன்படுத்தி தங்களின் மீதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தி குறைத்தது தான். ஆனால் தமிழ்நாடு அதற்கு நேர் முரணாக செயல்பட்டது.

By admin