• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

ஸ்டார்ம் ஷாடோ: ரஷ்யா – யுக்ரேன் போரில் இந்த ஏவுகணை என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

Byadmin

Sep 16, 2024


ஸ்டார்ம் ஷாடோ, ரஷ்யா - யுக்ரேன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்டார்ம் ஷாடோ எனப்படும் நீண்ட தூர ஏவுகணை

ரஷ்ய எல்லைக்குள் ஸ்டார்ம் ஷாடோ (Storm Shadow missiles) எனப்படும் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு யுக்ரேனுக்கு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஏவுகணைகள் யுக்ரேனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்நாட்டில் எல்லைக்குள் மட்டுமே இது பயன்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக இந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று யுக்ரேன் கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவிற்குள் உள்ள அந்நாட்டின் ராணுவ தளங்களை தாக்க யுக்ரேன் அனுமதி கோரி வருகிறது.

ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்த ஏவுகணைகளை அவ்வாறு பயன்படுத்த யுக்ரேனுக்கு அனுமதி வழங்காதது ஏன்? இந்த ஏவுகணைகள் ரஷ்யா – யுக்ரேன் போரில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

By admin