• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

ஸ்டார்லிங்க்: ஈலோன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள் வானியல் ஆய்வுகளுக்கு இடையூறாக உள்ளனவா?

Byadmin

Sep 21, 2024


ஸ்டார்லிங்க், செயற்கைக்கோள், ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களின் காட்சியை பிரதிபலிக்கும் கலைப்படைப்பு

ஈலோன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள், பிரபஞ்சத்தை உற்றுநோக்கும் ஆய்வுகளுக்கு இடையூறாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஈலோன் மஸ்கின் செயற்கைக்கோள் வலையமைப்பில் இருந்து வரும் ரேடியோ அலைகள், விஞ்ஞானிகளின் பிரபஞ்சத்தை உற்றுநோக்கும் செயல்முறைக்கு தடங்கலை ஏற்படுத்துகிறது.

மஸ்க்கின் புதிய தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள், உலகம் முழுவதும் வேகமாக இணையத்தை வழங்குகின்றன. இவை முந்தைய பதிப்புகளைக் காட்டிலும் அதிகளவில் ரேடியோ தொலைநோக்கிகளின் பாதையில் குறுக்கிடுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

நெதர்லாந்து ரேடியோ வானியல் நிறுவனத்தின் (ASTRON) கூற்றுபடி, சுற்றுப்பாதையில் வட்டமிட்டு வரும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள், ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் பிரபஞ்சத்தை உற்று நோக்குவதை தடுக்கின்றன. இது வானியல் ஆராய்ச்சிக்கு இடையூறாக இருக்கக் கூடும்.

By admin