• Thu. Jul 16th, 2026

24×7 Live News

Apdin News

ஸ்டீஃபன் ஃபிளெமிங்: பலமான சிஎஸ்கே அணியை உருவாக்கியவர், அதன் சரிவுக்கும் ஒரு காரணம் ஆனது எப்படி?

Byadmin

Jul 16, 2026


ஸ்டீஃபன் ஃபிளெமிங், சிஎஸ்கே, சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், X/Chennai IPL

படக்குறிப்பு, சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பில் இருந்துமே அவர் விலகியிருக்கிறார் (கோப்புப் படம்).

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் ஸ்டீஃபன் ஃபிளெமிங். 2009-ஆம் ஆண்டு முதல் நீண்ட காலம் சிஎஸ்கே அணியின் அங்கமாக இருந்த அவர் சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பில் இருந்துமே விலகியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான பயிற்சியாளர் இவர்தான். ஐபிஎல் தொடரில் அதிக முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியும் சிஎஸ்கேதான். அதில் 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி அதில் 5 கோப்பைகளையும் வென்றிருக்கிறது. வேறு எந்த அணியுமே ஐபிஎல் தொடரில் இவ்வளவு முறை பிளே ஆஃப் சுற்றுக்கோ, இறுதிப் போட்டிக்கோ நுழைந்ததில்லை.

அதுமட்டுமல்லாமல், முன்பு நடந்துகொண்டிருந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் 5 சீசன்களில் இரண்டு முறை சிஎஸ்கே அணிக்கு கோப்பை வென்று கொடுத்திருக்கிறார் ஃபிளெமிங்.

இப்படி பல சாதனைகள் படைத்திருந்தாலும், ஐபிஎல் அரங்கில் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகவே அவருடைய பயிற்சியின் மீதும், அணிக் கட்டமைப்பின் மீதும் பெரும் விமர்சனங்கள் எழுந்தன.

தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சிஎஸ்கே, கடந்த 3 சீசன்களாக தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போனதால், ஃபிளெமிங் மீதான விமர்சனங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று ரசிகர்களும் சமூக ஊடகங்களில் வாதிட்டனர். இந்நிலையில், ஜூலை 13 அன்று அவர் பதவி விலகிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

By admin