• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

ஸ்பேஸ் வாக்: விண்வெளியை கண்டு ரசித்த கோடீஸ்வரர் – ஸ்பேஸ் எக்ஸ் சாதித்தது எப்படி?

Byadmin

Sep 13, 2024


முதல் தனியார் ஸ்பேஸ் வாக்: விண்வெளியை கண்டு ரசித்த கோடீஸ்வரர் - எப்படி சாத்தியமானது?

பட மூலாதாரம், Polaris/X

கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் முதல் தனியார் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இது தனியார் நிதியுதவியுடன் இயங்கும் முதல் விண்வெளிப் பயணம் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் போலரிஸ் டான் (Polaris Dawn).

கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், அன்னா மேனன், ஸ்காட் போட்டீட், சாரா கில்லிஸ் ஆகியோர் போலரிஸ் டான் திட்டத்தின் குழுவில் உள்ளனர். இந்த நான்கு பேரும் நேற்று (செப்டம்பர் 12) விண்வெளிக்குச் சென்று ஸ்பேஸ் வாக் அனுபவத்தை மகிழ்ச்சியோடு அனுபவித்துள்ளனர். இதற்கென பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட ‘போலரிஸ் டான்’ என்ற விண்கலம் இவர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

அவர்கள் விண்வெளியையும், பூமியின் பிரமாண்ட காட்சியையும் வியந்து பார்த்த காணொளியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பணம் பரிமாற்றச் செயலாக்க வணிகமான ஷிஃப்ட் 4-இன் (Shift4) நிறுவனர் ஜாரெட் ஐசக்மேன் மூன்று விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு நிதியளித்தார். அவர் நிதியளித்த மூன்று திட்டங்களில் `போலரிஸ் டான்’ முதல் திட்டம் ஆகும்.

By admin