• Wed. Sep 16th, 2026

24×7 Live News

Apdin News

ஸ்வாமிநாராயண் பிரிவினர் ‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்று நீதிமன்றத்தில் கூறியது ஏன்?

Byadmin

Sep 16, 2026


பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்வாமிநாராயண் பிரிவும் போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சன்ஸ்தா (பிஏபிஎஸ்) அமைப்பும் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

    • எழுதியவர், அர்ஜவ் பரேக்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்வாமிநாராயண் பிரிவும் போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சன்ஸ்தா (பிஏபிஎஸ்) அமைப்பும் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளன.

பாரிஸில் நடைபெற்ற இந்தச் சம்பவம், அந்தப் பிரிவினருக்கு எதிராக ‘பெண்களுக்கு எதிரான பாகுபாடு’ குற்றச்சாட்டுகளையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியது.

எனினும், ஸ்வாமிநாராயண் பிரிவைப் பின்பற்றுபவர்கள் பெண்களை நடத்தும் விதம் குறித்து பல ஆண்டுகளாகவே சர்ச்சைகள் இருந்து வருகின்றன.

பிரபல பத்திரிகையாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சலீல் திரிபாதி, குஜராத்திகள் குறித்து தான் எழுதிய புத்தகத்தில், “ஸ்வாமிநாராயண் பிரிவின் எல்லைகளே குஜராத்தின் எல்லைகள். அவர்கள் தங்களுக்கென்று சொந்த எல்லைகளை வகுத்துக்கொண்டுள்ளனர். இந்தப் பிரிவில் பெண்களுக்கு விதிக்கப்படும் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள், அந்த எல்லைகளை அமல்படுத்துவதற்கான மற்றொரு வழியாகும்” என்று குறிப்பிடுகிறார்.

எனினும், ஸ்வாமிநாராயண் பிரிவு பெண்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், தலித்துகளுக்கு எதிராகவும் பாகுபாடு காட்டிய வரலாறு கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

By admin