• Wed. Sep 16th, 2026

24×7 Live News

Apdin News

புதிய செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? 7 முக்கிய விஷயங்கள்

Byadmin

Sep 16, 2026


புது செல்போன் வாங்க பழையதை எக்சேஞ்ச் செய்கிறீர்களா? ஆபத்தை தவிர்க்க கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் டியோ (iPhone Duo) உடன் ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் (18 Pro Max) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனது வாடிக்கையாளர்களுக்காக ஆப்பிள் நிறுவனம் ‘டிரேட்-இன்’ (trade-in) எனப்படும் பரிமாற்றத் திட்டத்தை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக் கொண்டு, புதிய ஐபோனை வாங்கும் போது தள்ளுபடி அல்லது உடனடி கடன் (instant credit) பெறலாம்.

பழைய கைப்பேசியைக் கொடுத்து புதிதைப் பெறும் சலுகையை வழங்கும் ஒரே நிறுவனம் ஆப்பிள் மட்டும் அல்ல.

ஆனால், பழைய கைப்பேசியைத் திருப்பிக் கொடுக்கும்போது பயனர்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும்?

உங்கள் பழைய மொபைல் போனை மாற்றுவதற்கு முன், உங்கள் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்துக் கவனத்தில் கொள்ள வேண்டும். மொபைல் போனில் நமது தனிப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளன. நமது வங்கிக் கணக்குகள், கடன் மற்றும் பற்று அட்டை விவரங்கள், பிரவுசிங் வரலாறு, குக்கீ மற்றும் நமது இணையப் பயன்பாட்டுத் தகவல்கள் அதில் சேமிக்கப்பட்டுள்ளன.

By admin