• Sat. Aug 29th, 2026

24×7 Live News

Apdin News

‘ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்’ – நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி

Byadmin

Aug 29, 2026


'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி
படக்குறிப்பு, நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திலிருந்து உயிர் தப்பிய சென்னையைச் சேர்ந்த நாவு கபீர் தாஸ் மற்றும் அவரது மனைவி விஜய புவனேஸ்வரி

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய வேளச்சேரி முருகு நகரைச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் மறுஜென்மம் எடுத்து வந்தது போல் இருக்கிறது என்று தெரிவித்தனர்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வெள்ளி இரவு சென்னை வந்தடைந்த 21 பேரில் நாவு கபீர்தாஸ் மற்றும் அவரது மனைவி விஜய புவனேஸ்வரி ஆகியோரும் அடங்குவர்.

வெள்ளம் ஏற்பட்ட ராசுவா பகுதியில், கும்பகோணத்தில் உள்ள ஏஜென்சி மூலமாக சென்ற 57 பேர் மூன்று பேருந்துகளில் சென்றுக் கொண்டிருந்தனர். இரு மலைகளுக்கு இடையில் கீழே ஆறு ஓடிக் கொண்டிருக்க, ஒரு வளைவான பாதையில் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஒரு பெரிய சத்தம், விழ தொடங்கிய கற்கள், பாறைகள், பாய்ந்து வந்த வெள்ளம் ஒட்டிக் கொண்டு வந்த சேறும் சகதியும் என ராசுவா சில நொடிகளில் பேரிடர் பகுதியாக மாறியது.

 நேபாள வெள்ளப்பெருக்கு

பட மூலாதாரம், Vijaya Buvaneswari

படக்குறிப்பு, நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய 21 பேர் வெள்ளிக்கிழமை இரவு தமிழகம் திரும்பினர்.

‘பின்னால் இருந்த பேருந்து சாய்ந்தது’

மூன்று பேருந்துகளில் இரண்டாவது சென்றுக் கொண்டிருந்த பேருந்து மட்டும் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளாமல் தப்பியது.

By admin