• Wed. Jul 9th, 2025

24×7 Live News

Apdin News

ஹஜ் பயணத்துக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் | Applications for Hajj pilgrimage open until Jul 31

Byadmin

Jul 9, 2025


சென்னை: தமிழக அரசின் பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் நலத்​துறை செயலர் இ.சர​வணவேல்​ராஜ் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: 2026-ம் ஆண்​டில் ஹஜ் பயணம் மேற்​கொள்ள விரும்​பும் தமிழகத்​தைச் சேர்ந்த முஸ்​லிம்​களிட​மிருந்​து, மும்​பை​யி்ல் உள்ள இந்​திய ஹஜ் கமிட்டி விண்​ணப்​பங்​களைப் பெற தொடங்​கி​யுள்​ளது.

இந்​திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணத்​துக்கு விண்​ணப்​பிக்க விரும்​புவோர் https//hajcommitee.gov.in என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி ஜூலை 31 வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம்.

மேலும், ‘ஹஜ் சுவி​தா’ (HAJ SUVIDHA) செயலி வழி​யாகவும் விண்​ணப்​பிக்​கலாம். தேர்ந்​தெடுக்​கப்​பட்டவர்​கள் தங்​கள் விருப்​பத்​தின் அடிப்​படை​யில் இரண்டு புறப்​பாட்டு தளங்​களை தேர்ந்​தெடுக்​கலாம். ஹஜ் பயண வழி​முறை​களை இந்​திய ஹஜ் குழு​வின் இணை​யதளத்​தில் (https://hajcommittee.gov.in) தெரிந்து கொள்​ளலாம்.

2025 ஹஜ் பயணத்​துக்​கான “நுசுக் மசார்” போர்ட்​டலின் படி, பாஸ்​போர்ட்​டுக்கு புதி​தாக விண்​ணப்​பிப்​பவர்​கள் குடும்ப பெயர், கடைசி பெயர் ஆகிய​வற்றை கண்​டிப்​பாக பூர்த்தி செய்ய வேண்​டும்.

தேர்ந்​தெடுக்​கப்​படும் பயணிக்கு முதல் தவணை தொகை​யாக ரூ.1.5 லட்​சத்தை செலுத்த வேண்​டும். மேலும் ஹஜ் பயணி​கள் எதிர்​பா​ராத மரணம் அல்​லது கடுமை​யான மருத்​துவ நோய் தவிர வேறு காரணத்​துக்​காக பயணத்தை ரத்து செய்தால் அபராதம் விதிக்கப்​படும்.



By admin