• Tue. Sep 24th, 2024

24×7 Live News

Apdin News

ஹரிணி அமரசூரிய: இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமரான இவரது பின்னணி என்ன?

Byadmin

Sep 24, 2024


ஹரிணி அமரசூரிய

பட மூலாதாரம், FACEBOOK/HARINI AMARASURIYA

படக்குறிப்பு, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பொறுப்பேற்றார் ஹரிணி அமரசூரிய

சமீபத்தில் நடந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். இதையடுத்து, அதுவரை பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று (செவ்வாய், செப்டம்பர் 24) பிற்பகல் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதற்குமுன் பிரதமர்களாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தொடர்ந்து பிரதமரானார் ஹரிணி அமரசூரிய. மற்ற இரண்டு பிரதமர்களைப் போல் இல்லாமல், குடும்ப அரசியல் பின்னணி ஏதும் இன்றி ஹரிணி பிரதமர் ஆனது எப்படி?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இளமைக்காலம் மற்றும் கல்வி

1970-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி கொழும்பில் பிறந்தார் ஹரிணி. இரண்டு உடன்பிறந்தவர்கள் அவருக்கு உள்ளனர்.

By admin