• Fri. Oct 9th, 2026

24×7 Live News

Apdin News

ஹிமாலயன் மோனல்: இமயமலையில் வாழும் இந்த அழகிய காட்டுக்கோழி தனது குரலை மாற்றுவது ஏன்?

Byadmin

Oct 9, 2026


மனிதச் செயல்பாடுகளால் குரலை மாற்றும் இமயமலைப் பறவை

    • எழுதியவர், ரசிதா பிரசாத்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இமயமலைப் பகுதியில் மனிதச் செயல்பாடுகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள ஒரு முக்கியப் பறவையின் வாழ்விடமும் தகவல் பரிமாற்ற முறையும் மாறிவருவதாக இந்திய ஆய்வாளர்கள் மேற்கொண்ட இரண்டு தனித்தனி ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

இமயமலையின் மலைக்காடுகளில் வாழும் ஹிமாலயன் மோனல் என்ற காட்டுக்கோழி இனப்பறவை, அந்தப் பிராந்தியத்தின் கலாசாரம், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் அடையாளத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது.

பச்சை, நீலம், தாமிர நிறங்கள் கலந்த பளபளப்பான இறகுகளைக் கொண்ட ஆண் மோனல், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் மாநிலப் பறவையாகவும், நேபாளத்தின் தேசியப் பறவையாகவும் உள்ளது.

ஆனால், சுற்றுலா வளர்ச்சியும் கட்டமைப்பு விரிவாக்கங்களும் அதன் வாழ்விடத்தைச் சுருக்கி வருவதோடு, அதிகரிக்கும் மனித இரைச்சல் அந்தப் பறவையின் தகவல் பரிமாற்ற முறையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட இரண்டு ஆய்வுகள், மோனல் பறவை எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல்களை வெளிச்சமிட்டுள்ளன.

By admin