• Wed. Sep 25th, 2024

24×7 Live News

Apdin News

ஹெஸ்பொலா அமைப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது? இஸ்ரேல் மீது போர் தொடுக்க வாய்ப்பு உள்ளதா?

Byadmin

Sep 25, 2024


ஹெஸ்பொலா அமைப்பு எவ்வளவு சக்தி வாய்ந்தது? : இஸ்ரேலுடன் போர் தொடுக்க வாய்ப்பு உள்ளதா?

பட மூலாதாரம், EPA

லெபனானில் செப்டம்பர் 17 அன்று ஹெஸ்புலா அமைப்பினர் பயன்படுத்திய கையடக்க பேஜர் சாதனங்கள் வெடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் என்றும், 3,000 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

ஹெஸ்பொல்லா இந்த தாக்குதலுக்கு வெளிப்படையாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இஸ்ரேலிய ராணுவம் இதுபற்றி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இஸ்ரேலுக்கும் ஹெஸ்புலாவுக்கும் இடையிலான எல்லை தாண்டிய மோதல், கடந்த 11 மாதங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த மோதல் காஸாவில் நடந்துவரும் போரால் தூண்டப்பட்டது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான குடிமக்களை லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லைக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும் என்பது தான் காஸா போரின் புதிய நோக்கம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை கூறியது. இதையடுத்து சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன.

By admin