• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸில் அதிகரிக்கும் பதற்றம்: 3 கப்பல்களை தாக்கி, 2-ஐ கைப்பற்றிய இரான் – என்ன நடக்கிறது?

Byadmin

Apr 22, 2026


ஹோர்மூஸ் நீரிணை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை அருகே உள்ள கப்பல்கள் (கோப்புப் படம்)

அமெரிக்கா – மற்றும் இரான் இடையே அறிவிக்கப்பட்டிருந்த இரண்டு வாரகால போர்நிறுத்தம் இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இணக்க ஒப்பந்தம் எட்டப்படும் வரை இரான் உடனான போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார் டிரம்ப்.

அதே வேளையில் இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் ஹோர்மூஸ் நீரிணையில் வந்த மூன்று கப்பல்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் ‘துப்பாக்கி பொருத்தப்பட்ட படகு’ இந்த தாக்குதல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.சி ஃப்ரான்செஸ்கா கப்பல் 2018-ல் எடுக்கப்பட்ட படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எம்.எஸ்.சி ஃப்ரான்செஸ்கா கப்பல் 2018-ல் எடுக்கப்பட்ட படம்

தாக்கப்பட்ட கப்பல்கள் எவை?

ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 3 கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாக கடற்சார் உளவு நிறுவனமான வேன்கார்ட் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்துள்ளது

By admin