• Sun. May 3rd, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸ் நீரிணைக்கு மாற்றாக சிரியா முன் வைக்கும் திட்டம் – இந்தியாவுக்கு போட்டியா?

Byadmin

May 3, 2026


ஹோர்மூஸ், இந்தியா, சிரியா, சிரியா அதிபர் அஹமது அல்-ஷாரா, எரிசக்தி, போக்குவரத்து, இரான்

பட மூலாதாரம், Byron Smith/Getty Images

படக்குறிப்பு, எரிசக்தி மற்றும் பொருட்களின் போக்குவரத்திற்கான ஒரு மாற்றுப் பாதையாக சிரியாவை மாற்றுவதே தற்போது தனது குறிக்கோள் என்று சிரியா அதிபர் தெரிவித்துள்ளார்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மத்திய கிழக்கில், போரின் பின்விளைவுகளையும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்படும் அபாயத்தையும் இரான் எதிர்கொண்டுள்ள நிலையில், சிரியா மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்திற்கான மைய வழித்தடமாகத் சிரியா செயல்பட முடியும் என்று அந்நாட்டு அதிபர் அகமது அல்-ஷாரா கூறுகிறார். ஏப்ரல் 17 அன்று துருக்கியில் நடைபெற்ற அன்டால்யா தூதரக மன்றத்திலும், அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு சைப்ரஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கூட்டத்திலும் அவர் தனது இந்தத் திட்டத்தை முன்வைத்தார்.

சிரியாவின் இந்தத் திட்டமானது, இந்தியாவின் முன்னோடித் திட்டமான இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட (IMEC) திட்டம் உட்பட பல பிற திட்டங்களிடம் இருந்து போட்டியை எதிர்கொள்ளக்கூடும்.

இந்த திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல, சிரியா அரசாங்கம் இரு பெரிய முன்முயற்சிகளை ஊக்குவித்து வருகிறது: ‘நான்கு கடல்கள்’ திட்டம் மற்றும் ‘4+1’ திட்டம்.

இந்த இரண்டு முன்னெடுப்புகள் குறித்த நம்பிக்கை பரவலாக காணப்பட்டாலும், அவை பல பெரிய சவால்களையும் எதிர்கொள்கின்றன.

By admin