ஸ்டாஃபோர்டின் ஹோம்சாஃப்ட் வீதியில் (Holmcroft Road) மரம் விழுந்ததில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கடந்த சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் ஆம்புலன்ஸ், காவல்துறையினர் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்தன. இருப்பினும், சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் இரவு 7:30 மணியளவில் அவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவனின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் அந்தப் பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பொதுமக்கள் சம்பவ இடத்தில் பூங்கொத்து மற்றும் பொம்மைகளை வைத்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக இருக்க செயின்ட் பெர்டெலின் தேவாலயம் (St Bertelin’s Church) ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டிற்குப் பிறகு திறந்து வைக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் அந்தச் சிறுவன் “அன்பான, பண்பான மற்றும் மென்மையான குணம் கொண்டவன்” என்று பலரால் வர்ணிக்கப்பட்டார். ஸ்டாஃபோர்ட் ரேஞ்சர்ஸ் கால்பந்து கிளப் இந்த மரணத்தை “இதயத்தை உடைக்கும் செய்தி” என்று விவரித்துள்ளது.
மேலும், ஸ்டாஃபோர்ட் மற்றும் மாவட்ட ஞாயிறு கால்பந்து லீக் போட்டிகளுக்கு முன்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
The post மரம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: பொதுமக்கள் அஞ்சலி appeared first on Vanakkam London.