• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பூனை உரிமையாளரின் 30வது பிறந்தநாளில் வீடு திரும்பியது எப்படி?

Byadmin

Aug 19, 2026


சார்லி

பட மூலாதாரம், Lucy Robertson

படக்குறிப்பு, சார்லி

பிரிட்டனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 13 வயது பூனை ஒன்று தற்போது தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளது.

சார்லி என்ற அந்தப் பூனை காணாமல் போனபோது அதற்கு மூன்று வயது. 2016 ஏப்ரலில் சார்லி காணாமல் போனதால் அதன் உரிமையாளர்களான லூசி மற்றும் ஹன்னா ராபர்ட்சன் மிகவும் வேதனை அடைந்தனர்.

வீட்டுக்கு வெளியே சுற்றித் திரியும் பூனையான சார்லி, வழக்கமாகப் பகல் நேரங்களில் தெருக்களில் சுற்றித் திரியும். ஆனால், குடும்பத்தினர் புதிய பகுதிக்கு குடிபெயர்ந்த சில நாட்களிலேயே ஒருநாள் வீட்டை விட்டு வெளியே சென்ற சார்லி மீண்டும் திரும்பவில்லை.

குடும்பத்தினர் பல மாதங்களாக சார்லியைத் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ஆனால், கடந்த மாதம் லூசியின் 30-வது பிறந்தநாளன்று, அவர்கள் எதிர்பாராத தொலைபேசி அழைப்பைப் பெற்றனர். சார்லி கண்டுபிடிக்கப்பட்டதாக கால்நடை மருத்துவமனையில் இருந்து அவர்களுக்கு அழைப்பு வந்தது.

By admin